சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக, 49 அரசியல் கட்சிகள் பங்கேற்றன.

by Admin / 02-11-2025 05:05:02pm
 சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக, 49 அரசியல் கட்சிகள் பங்கேற்றன.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக, 49 அரசியல் கட்சிகள் பங்கேற்றுத் தங்கள் உணர்வுகளையும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளன.. 
இந்தக் கூட்டத்திற்கு மொத்தம் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கலந்துகொண்ட கட்சிகளின் எண்ணிக்கை 49 ஆகும். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்,

1,வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடுவதாகும்... 

கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் முழுமையான பட்டியல் வெளியிடப்படவில்லை.. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் கலந்துகொண்டன.. பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தமிழக வெற்றிக்கழகம்,தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன.. 
இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தின.. 

 

Tags :

Share via