பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் நான்காயிரம் சொகுசு கார்கள் உடன் கடலில் மூழ்கிய கப்பல்

by Admin / 02-03-2022 02:11:46pm
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் நான்காயிரம் சொகுசு கார்கள் உடன் கடலில் மூழ்கிய கப்பல்

போர்ச்சுக்கல் மத்தியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சொகுசு கார்களை ஏற்றி வந்து சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டாதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் நான்காயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் இழுவைப்படகுகள் களமிறக்கப் பட்டனர் கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தீயணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது.

ஆனால் கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் பரவிய தீயை அணைக்கம்  முயற்சி தோல்வியில் முடிந்தது கடலின் அடியில் 2 மையில் சரக்கு கப்பல் மூழ்கி உள்ளது கப்பலில் இருந்து இதுவரை எரிபொருள் கசிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via