மதுப்போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர். தர்மஅடிகொடுத்த பயணிகள்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே (TN 72 -N-1687)என்ற எண்ணுள்ள அரசு பேருந்தை ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மது போதையில் இயக்கி வந்த நிலையில் அதனை கண்டறிந்த அந்தபேரூந்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அவரை பேருந்துடன் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் மது போதையில் வாகனத்தை இயக்கிய தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மீது மதுபோதையில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இந்தசம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : மதுப்போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர். தர்மஅடிகொடுத்த பயணிகள் .