குற்றாலத்தில் ஆடி அடங்கிய காட்டாற்று வெள்ளம்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 12ஆம் தேதி இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக மூன்று நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையை தொடர்ந்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக குற்றாலம் அருவி,மற்றும் பழைய குற்றாலம் அருவியில் ஆறாவது நாளாக குளிக்க தடை தொடர்கிறது. 5 நாட்களுக்குப்பின்னர் ஐந்தருவி,மற்றும் சிற்றருவி,புலியருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பழைய குற்றாலம் பகுதியில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செப்பனியிடும் பணியை இன்னும் தொடங்கவில்லை அதே சமயம் பழைய குற்றாலம் அருவியில் வனத்துறை சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குற்றாலம் பேரூராட்சி சார்பில் குற்றாலம் பேரருவிப் பகுதியில் சேதம் அடைந்த தரை தளங்கள் சீரமைக்கும் பணிகள்நடந்துவருகின்றன.மேலும் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் உள்ள கைப்பிடி கம்பிகள் பற்ற வைக்கும் பணிகளும் நடைபெற்றன தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. குற்றாலம் மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சகஜ நிலை திரும்புவதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் ஐந்து தினங்களுக்கு பிறகு வியாபாரிகள் இன்று ஆறாவது நாளாக கடைகளை திறந்து உள்ளனர் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் பகுதிகள் சகஜ நிலையை எட்டி வருகின்றன இருப்பினும் குளிக்க தடை தொடர்வதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரருவிமற்றும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்காமல் ஐந்தருவி நோக்கி படையெடுத்து சென்று வருவதால் கடந்த ஐந்து தினங்களாக உணவகங்கள் உள்ளிட்ட டீக்கடைகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : குற்றாலத்தில் ஆடி அடங்கிய காட்டாற்று வெள்ளம்.