தேனி-போடி மக்கள் குஷி! ஆண்டிப்பட்டி-தேனி இடையே ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்…  

by Admin / 04-08-2021 02:38:25pm
தேனி-போடி மக்கள் குஷி! ஆண்டிப்பட்டி-தேனி இடையே ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்…  



மதுரை&போடி அகலரயில்பாதை திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மதுரை-போடி ரயில் வழித்தடத்தில் முதற்கட்டமாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலும், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலும் இரண்டு கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
 
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கிலோமீட்டர் அகலரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவடைந்த நிலையில், ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையில் ரயில் எஞ்சின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆண்டிப்பட்டிக்கு வந்த ரயில் எஞ்சின் முன்பாக பூஜை நடத்தப்பட்டது.
 
அதன் பின்னர் தேனி வரையில் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் எஞ்சின் இயக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அகல ரயில் பாதையில் ரயில் எஞ்சின் வருவதை கண்ட மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

மதுரை-போடி அகலரயில்பாதை திட்டத்தில் மதுரை-தேனி வரையில் பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை நடத்தி முடிக்கப்பட்டதால் மதுரை-தேனி இடையே மிக விரைவில் பயணிகள் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via