சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் இன்று தொடங்கி உள்ளது.

by Admin / 05-02-2026 04:22:00pm
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் இன்று தொடங்கி உள்ளது.

சட்டம் மன்றத் தேர்தல் 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் இன்று தொடங்கி உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை குறித்து ஆய்வு செய்ய இந்திய துணை தேர்தல் ஆணையர் பிப்ரவரி 11-ஆம் தேதி தமிழக வரவுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான அவகாசம் ஜனவரி= 30 உடன் முடிவடைந்த நிலையில் திருத்தப்பட்ட  வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது .இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via