"தமிழகத்தில் கொலை என்ற செய்தி வராத நாளே இல்லை”

மதுரை மீனாட்சி மிஷனில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். “மதுரையில் ஒரு வாரத்தில் மட்டும் 4 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. போலீசாரை எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே முதல்வர் பயன்படுத்துகிறார்” என்றார்.
Tags :