பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

by Editor / 25-04-2022 05:04:52pm
பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் அண்ணன் கார்த்திக் மற்றும் தம்பி  வெங்கடேஷ் இருவரிடமும் லாசர் சண்முகம் நரேந்திரன் உள்ளிட்ட 10 பேர் வீன் வம்பு செய்து தாக்கியுள்ளனர்.கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கண்டதும் கார்த்தியின் தம்பி வெங்கடேஷ் தப்பியோட அண்ணன் கார்த்திகை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ்யிடம் லாசர் மற்றும் சண்முகம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டுள்ளனர்.அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன் இருவரையும் தாக்கியுள்ளார்.இதன் காரணமாக இருவரது நண்பர்கள் 10 பேர் இன்று தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தகவல்.உயிரிழந்த கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo