சரக்குரயில் தடம் புரண்டது சீரமைப்பு பணிகள் தீவீரம்

டிராக்டர்கள் போக்குவரத்திற்கு பயன்படும் சரக்கு ரயில் கூடல் நகரில் இருந்து மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலின் கடைசி சரக்குபெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் பாதையை விட்டு இறங்கியது. விபத்து பற்றி அறிந்தவுடன் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், முதுநிலை கோட்ட பொறியாளர் முகைதீன் பிச்சை, கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன், கோட்ட தொலைத் தொடர்பு அதிகாரி ராம்பிரசாத் ஆகியோர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

Tags :