அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சினிமா பிரபலங்கள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலையம்மன் சந்நிதி உள்ளிட்ட கோவிலில் பல்வேறு சன்னதியில் வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இருந்த பக்தர்கள் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் அமர்ந்து இசையமைப்பாளர் அனிருத் தியானம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags : அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம்.