திருவாரூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு -4 பேர் கைது.

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்களால் கல்லால் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சாகுல் ஹமீது, ஹாஜா நிவாஸ், முகமது மகசூன் மகதீர், அகமதுல்லா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :