குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்-.ஹரியானா காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை
ஹரியானா சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரே கட்டாயமாக நடைபெற உள்ளது.. 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், 500 ரூபாய் மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் வீடுகளுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. அத்துடன், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்று கூறினாலும் 2004 இல் இருந்து 2014 வரை உள்ள காலகட்டத்தில் 6..7 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2014 இல் இருந்து 2024 வரை சராசரியாக 5..9 சதவீதமாக குறைந்து பொருளாதாரத்தை இரட்டிப்பாகும் இலக்கிற்கு எதிராக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 2013 -14 லட்சம் கோடியில் இருந்து 20 23-24 இல் 173 லட்சம் கோடியாக உயரும் இலக்கை விட மிகக் குறைவு என்றும் வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் சரிவு மக்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் இதன் தாக்கும் தனிநபர் வருமானம் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் குடும்ப நிகர சொத்துக்கள் குறைந்துவிட்டன வீட்டு பொறுப்புக்குள் அதிகரித்துள்ளன மற்றும் குடும்பங்கள் அதிகமாக கடன் வாங்கி உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :