கூட்டணியில் இருந்து இதற்காகதான் விலகினேன் நிதிஷ்குமார்

by Staff / 31-01-2024 01:56:59pm
கூட்டணியில் இருந்து இதற்காகதான் விலகினேன் நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக உருவாக்கிய கூட்டணிதான் இந்தியா கூட்டணி. இதில் இடம்பெற்றிருந்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துகொண்டார். இந்நிலையில் இந்தியா என்ற பெயர் கூட்டணிக்கு வேண்டாம் என்றும், வேறு பெயரை தேர்வு செய்யலாம் என்றும் தெரிவித்தேன். ஆனால் அதை அவர்கள் ஏற்காமல், பெயரை வைத்துவிட்டனர். எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று இன்னும் அவர்கள் முடிவு செய்யவில்லை. அதனால்தான் நான் அந்த கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தேன் என நிதிஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories