கொரோனா தடுப்பூசி உற்பத்தியைஉடனடியாக  அதிகரிக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

by Editor / 30-04-2021 05:22:47pm
கொரோனா தடுப்பூசி உற்பத்தியைஉடனடியாக  அதிகரிக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நோயாளிகள் அதிகரிப்பால், பல பகுதிகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்துகொண்டியிருக்கிறது.
இந்த சூழலில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 18 வயதானவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் மத்திய அரசு தலையிட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்யும்போது, சமமாக கிடைப்பது எப்படி உறுதி செய்யப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

 

Tags :

Share via