16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு  முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்.

by Editor / 25-09-2021 07:43:36pm
16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு  முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்.

 

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான், டெல்லியை 154 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது.155 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆவேஷ் கான் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் லிவிங்ஸ்டன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அன்ரிச் நோர்க்கியா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


இதன்பிறகு, களத்தில் இடது கை பேட்டர் டேவிட் மில்லர் இருந்ததால், ரவிச்சந்திரன் அஸ்வினை பவர் பிளேவில் அறிமுகப்படுத்தினார் ரிஷப் பந்த். இதற்குப் பலனாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார் மில்லர். தொடர் விக்கெட்டுகள் காரணமாக பவர் பிளேவில் ராஜஸ்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.இதையடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சனுடன் மஹிபால் லோம்ரர் இணைய இருவரும் நிதானம் காட்டினார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10-ஐத் தாண்டத் தொடங்கியது.


 ரன் சேர்க்காமல் விக்கெட்டுகளை மட்டும் பாதுகாத்து விளையாடி வந்த இந்த இணையை ககிசோ ரபாடா பிரித்தார். 24 பந்துகளில் 19 ரன்ககள் மட்டுமே லோம்ரர் எடுத்தார். அடுத்த ஓவரில் ரியான் பராக் 2 ரன்களுக்கு அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து, சாம்சன் தனி ஆளாக அதிரடி காட்டிப் போராடத் தொடங்கினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டன.

இதனால், 3 ஓவர்களில் 56 ரன்கள் தேவை என்று இருந்த நிலை கடைசி 2 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற மிகமிகக் கடினமான நிலையானது.இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இதன்மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்.

 

Tags :

Share via