39 தொகுதிகளிலும் தாமரை சின்னம்: கே பி ராமலிங்கம்

by Staff / 10-02-2024 02:15:28pm
39 தொகுதிகளிலும் தாமரை சின்னம்: கே பி ராமலிங்கம்

தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜக தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது என பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணி கட்சிகள் யாருக்காவது மாநிலங்களவை சீட் வேண்டுமென்றால் மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். இதனால் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட நினைக்கும் பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via