இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தால் சட்டப்படி எதிர்கொள்வோம் விகடன் நிறுவனம்.

by Editor / 16-02-2025 07:24:49am
 இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தால்  சட்டப்படி எதிர்கொள்வோம் விகடன் நிறுவனம்.

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்து பிரதமர் மோடி பேசாமல் இருந்ததை சுட்டிக்காட்டி கடந்த 10-ஆம் தேதி விகடன் பிளஸ் இணைய இதழில் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விகடன் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று பல இடங்களில் விகடன் இணையதளம் இயங்கவில்லை என அந்நிறுவனத்துக்கு வாசகர்களிடம் இருந்து தகவல்கள் சென்றன. எனினும், தங்கள் தளத்தை முடக்கியதாக மத்திய அரசிடம் இருந்து முறையான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குவோம் என்றும் தங்கள் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று விகடன் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Tags : இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தால் சட்டப்படி எதிர்கொள்வோம் விகடன் நிறுவனம்.

Share via