தலைமை நீதிபதியை குழுவில் இருந்து நீக்க மசோதா

by Staff / 10-08-2023 01:00:45pm
தலைமை நீதிபதியை குழுவில் இருந்து நீக்க மசோதா

தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கி, பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் இருப்பார் என புதிய மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டெல்லி நிர்வாகத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க அவசர சட்டம் பிறப்பித்து குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via