செங்கோட்டையில் 144 தடை உத்தரவு
இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டில்லி காவல்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :