டெல்லிமாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி அமைச்சகத்தை நோக்கி நடத்திய லாங் மாச்சின் போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் உருவானது. ஜே என் யூ மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா மற்றும் முன்னாள் தலைவர் நிதீஷ் குமார் உள்பட மொத்தம் 51 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட்டின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரோகித் சட்டம் அமலாக்கம் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகளின் இட நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயிலை தாண்டி செல்லம் என்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் சுமார் 25 காவல்துறை அதிகாரிகள் கோயமுத்ததாக டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மாணவர் தரப்பிலும் பலர் காயம் அடைந்ததாக தகவல். மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் அம்பேத்கர் படத்தை சேதப்படுத்தியதாகவும் மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்களில் சிலர் காவல்துறை அதிகாரிகள் மீது செருப்பை வீசி தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :


















