இன்று கனடா பிரதமர்மார்க் கார்னி மும்பை வருகிறார். இது அவரின் முதல் இந்தியப் பயணம்

by Admin / 27-02-2026 08:22:43am
இன்று கனடா பிரதமர்மார்க் கார்னி மும்பை வருகிறார்.  இது அவரின் முதல் இந்தியப் பயணம்

இன்று கனடா பிரதமர் மார்க் கார்னி மும்பை வருகிறார். அங்கு இந்திய மற்றும் கனடா நாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள்மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.மார்ச் 1-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். அதன் பிறகு, மார்ச் 2-ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு கனடா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னியின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தூதரக ரீதியிலான கசப்புணர்வைக் குறைத்து, வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உறவை மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

Tags :

Share via