குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பியது.

by Editor / 06-07-2023 11:31:06pm
குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பியது. தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது இந் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, கருப்பாநதி அடைவினார் கோவில் நீர்த்தேக்கம் ராமநதி குண்டார் ஆகிய நீர் தேக்கங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக நேற்று 5ஆம் தேதி ஒரு நாள் மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் சிறிய நீர்த் தேக்கமான  36.10 அடி உயரமுள்ள குண்டாறு நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து இன்று நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை காலை 7 மணி நிலவரப்படி எட்டியது இதன் தொடர்ச்சியாக சுமார் 12 மணி அளவில் வனப்பகுதியில் கன மழை பெய்தது தொடர்ந்து நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய இதன் தொடர்ச்சியாக சுகுமார் ஒரு மணியளவில் நீர் தேக்கம் நிரம்பி வழிய தொடங்கியது தற்பொழுது நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது தற்போதைய நிலவரப்படி நீர்த்தேக்கத்திற்கு 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது மேலும் தொடர்ந்து நீர் தேக்கு நிரம்பி வழியைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பகுதியில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்
 

Tags :

Share via