லைக்கா நிறுவனத்தின் எட்டு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை.

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எட்டு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழில் கோலமாவு கோகிலா ,வடசென்னை ரஜினியின் 2.0, பொன்னியின் செல்வன் என பல்வேறு படைப்புகளை தமிழில் தந்த நிறுவனம் தற்பொழுது அஜித்குமாருடைய நடிப்பில் விடா முயற்சி என்கிற படத்தையும் தயாரித்து வருகிறது. அத்துடன் ரஜினியின் 171 வது படமான தலைவர் படமும் அவருடைய மகளுடைய லால் சலாம் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் தி. நகர் அலுவலகம், , அடையாறு அலுவலகம் என எட்டு இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. சட்டத்திற்கு புறம்பான வழியில் பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற் கொல்லப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :