மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக

by Staff / 03-12-2023 01:09:03pm
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

முதலமைச்சர் பதவி மீண்டும் சிவராஜ் சிங் சவுகானுக்கு கிடைக்குமா ?  அல்லது புதியவர்களுக்கு வாய்ப்புவழங்கப்படுமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது.  பாஜகவில் முதல்வர் பதவிக்கு முக்கியமாக 5 பெயர்கள் பற்றி தீவிர விவாதம் நடந்து வருகிறது.  அதில் முதலிடத்தில்   சிவராஜ் சிங் சவுகான்.உள்ளாா்.

மூத்த பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப்பிரதேச முதல்வராக உள்ளார்.4 முறை முதல்வராக பதவியேற்றுள்ளார்.2018-ம் ஆண்டு இவருடைய தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்விஅடைந்தது. 15 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸில் பிரச்சனை ஏற்பட்டு பாஜக ஆட்சியைமீண்டும் பிடித்தது .குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via