பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 -ஆம் தேதி

by Admin / 08-11-2025 02:32:42pm
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 -ஆம் தேதி

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 -ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தக் கூட்டத்தொடரை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..இந்தக் கூட்டத்தொடர் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை உள்ளடக்கிய அமர்வாக இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்..பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 -ஆம் தேதி
 

Tags :

Share via