தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதாக உறுதியளித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு சென்னைக்கு வருகை தந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு முக்கியப் பரிந்துரைகளை வழங்கினர்.தி.முக., அ.தி.முக உட்படப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின.தேர்தலில் பண விநியோகம் மற்றும் இலவசங்கள் வழங்கப்படுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தேர்தல் தேதியை இறுதி செய்யும் போது, தமிழகத்தின் முக்கியப் பண்டிகை மற்றும் திருவிழா நாட்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஐ(எம்), விசிக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி மற்றும் என்.பி.பி ஆகிய 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதாக உறுதியளித்தார்.
Tags :


















