இன்று தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை.
இன்று தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை ஒட்டிய இருக்கும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று வேகமாக வீச கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tags :


















