அதிபர் பதவி விலகுமாறுமனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, தன்னெழுச்சிப் போராட்டக்காரர்கள் கொழும்பு காலி வீதியிலுள்ள அலரி மாளிகையிலிருந்து அதிபரின் அலுலகத்தின் முன்பாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கெதிரான போராட்டம் 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :