குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தடையோடு ஆரம்பித்து தடையோடு முடியும் குற்றால சீசன்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகதொடர் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்த நிலையில், தற்போது 2 வது நாளாகவும் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.கனமழையோடு குற்றால சீசன் துவங்கியநிலையில் கனமழையோடு சீசன் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
ரசீது இல்லாத விடுதிகளில் கணக்கில்லாமல் கட்டணக்கொள்ளை என்பது குற்றாலத்தில் இந்தாண்டு அதிகரித்துள்ளது.குடியிருப்பு வீடுகளும் விடுதிகளாக மாறி நடக்கும் கொள்ளைகளுக்கு அரசுதான் நடவடிக்கைளை எடுக்கவேண்டும்.
Tags : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தடையோடு ஆரம்பித்து தடையோடு முடியும் குற்றால சீசன்.