கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொலை அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தபோது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 600 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :