காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு – பெண் எழுத்தருக்கு ரூ.5ஆயிரம் பரிசுவழங்கிய டி.ஜி.பி

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், ஆவணங்களை முறையாக பராமரித்த சசிகலா என்ற பெண் எழுத்தருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கி டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார் .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லும் வழியில், காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முதல் தகவல் அறிக்கை பதிவேடு, சிஎஸ்ஆர் ஜிடி , குற்றச் சம்பவப் பதிவேடு, அலுவலகப் பதிவேடு ஆகிய ஆவணங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.
ஆய்விற்குப் பின்னர், பதிவேடுகளைச் சரியாக பராமரிப்பு செய்த சசிகலா என்ற பெண் எழுத்தருக்கு, ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி தமது பாராட்டை டி.ஜி.பி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, டி.ஜி.பி சைலேந்திர பாபுவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் காவல்நிலைய ஆய்வாளர் கபீர்தாசன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : பெண் எழுத்தருக்கு ரூ.5ஆயிரம் பரிசுவழங்கிய டி.ஜி.பி