இருமாநில அரசுபேரூந்துக்கள் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர்பலி. 

by Editor / 03-02-2024 08:01:36pm
இருமாநில அரசுபேரூந்துக்கள் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர்பலி. 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தமிழக அரசு பேருந்து ஒன்று நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தமிழக அரசு பேருந்தும்,கேரள அரசு பேருந்தும் இன்று மதியம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயங்களுடன் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேரளா அரசு பேருந்து  ஓட்டுனர் அணிஸ் கிருஷ்ணன் வயது ( 43)  சிகிச்சை பலனின்றி பலி,  மேலும் இந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

Tags : இருமாநில அரசுபேரூந்துக்கள் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர்பலி. 

Share via
Logo