போதைக்கு எதிராக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு மாரத்தான்முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து பொதுமக்களோடு சேர்ந்து ஓடினார்.

by Admin / 26-06-2026 09:56:40am
போதைக்கு எதிராக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு மாரத்தான்முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து பொதுமக்களோடு சேர்ந்து ஓடினார்.

இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய போதைக்கு எதிராக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சென்னை காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் அருகே தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து பொதுமக்களோடு சேர்ந்து ஓடினார். நிகழ்வை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் தனது கையெழுத்தால் விளையாட்டை எடு போதையை விடு என்ற விழிப்புணர்வு செய்தியையும் வெளிப்படுத்தி மெரினா கடற்கரை சாலையில் பொதுமக்களுடனும் இளைஞர்களுடன் இணைந்து 3 கிலோமீட்டர் வரை ஓடினார். இந்நிகழ்வில் முதலமைச்சருடன் இணைந்து ஊராக வளர்ச்சி துறை அமைச்சர் என். ஆனந்த் ,ஆதவ், அர்ஜுனா ,மரியா வில்சன், வெங்கட்ராமன் ,தலைமைச் செயலாளர் சாய் குமார், காவல்துறை தலைவர் ,காவல்துறை ஆணையாளர் மற்றும் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் உடன் ஓடினர்.

 

Tags :

Share via
Logo