உதகையில் 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Staff / 20-05-2022 04:29:27pm
உதகையில் 124வது  மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்


நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உதகையின் 200வது ஆண்டு தினத்தையொட்டி ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கி வைத்த முதலமைச்சர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நூற்றாண்டு கட்டிடத்தின் மாதிரியையும் 124 மலர்கண்காட்சி என்ற பெயர் பலகையும் பார்வையிட்டார் ஆங்காங்கே மலர்களால் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகளை பார்வையிட்ட. முதலமைச்சர் சுற்றுலாப் பயணிகளோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிறகு அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் முதலமைசார்  பார்வையிட்டார்.

 

Tags :

Share via