பெண் காவலரிடம் தாலி சங்கிலி பறிப்பு- அண்ணாமலை கண்டனம்

சென்னை தாம்பரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காவலரின் செயின் பறிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது, “எட்டு இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலரிடமே தாலி சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என்றார்.
Tags : பெண் காவலரிடம் தாலி சங்கிலி பறிப்பு- அண்ணாமலை கண்டனம்