அலாஸ்காவில்மீண்டும் நிலநடுக்கம்

by Editor / 30-07-2021 06:09:19pm
அலாஸ்காவில்மீண்டும் நிலநடுக்கம்


அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. அலாஸ்காவின் பெர்ரிவில்லே என்ற பகுதிக்கு 91 கி.மீ. தென்கிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்திருந்தது.  


இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கன் தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.


இதனால், கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் பெரிய அளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.இந்தநிலையில், அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் நகரில் இருந்து தென்கிழக்கே 146 கி.மீ. தொலைவில் மீண்டும் 8.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.5 அளவில் பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 44.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 


பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ளதால் அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் அலாஸ்காவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via