அதிக மின் கட்டணம் வந்தால் என்ன செய்யலாம் ?

by Editor / 30-07-2021 06:14:04pm
அதிக மின் கட்டணம் வந்தால் என்ன செய்யலாம் ?



அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர் புகார் அளித்தால், மின் வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து, கட்டண திருத்தம் செய்வார்கள்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளுக்குச் சென்று மின் கட்டணம் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு மின் கட்டண அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.


ஆனால் தற்போது, மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின் அளவீடுகளை எடுக்கின்றனர். இந்நிலையில், தற்போதைய மின் கட்டணம், மின்சாரத்தை விட ஷாக் அடிக்கும் அனுபவத்தை தந்துள்ளதாக நுகர்வோர் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தின் மின்னகம் சேவை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.


அப்போது பேசிய அவர், “இதுவரை, அதிக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக 14 லட்சம் மின் நுகர்வோர் புகார் தெரிவித்திருந்தனர். மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தை திருத்தி, அதன் பின்னர் செலுத்தியுள்ளனர்.


அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர் 9498794987 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால், மின் வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டண திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் செய்வார்கள்” என்று செந்தில் பாலாஜி கூறினார்.

 

Tags :

Share via