பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

by Editor / 17-12-2022 09:42:54am
 பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

ஆவின் நெய் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று த.மா.காங்கிரஸ் கட்சி  தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனம், பால், நெய் விலை உயர்வை அமல்படுத்தியுள்ள நிலையில், நெய் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தரமான பொங்கல் தொகுப்பை தாமதமின்றி வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories