இந்தியா- ஹைதராபாத்தில் இருந்து உம்ரா யாத்திரைக்காக சென்ற42 பேர் இறப்பு
இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து உம்ரா யாத்திரைக்காக மெக்காவில் இருந்து மதினாவுக்கு 160 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முஃப்ரி ஹாத் வழியில் பேருந்தில் செல்லும் பொழுது எதிரே வந்த டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.. இதில் குறைந்தது 42 பேர் இறந்திருக்கலாம். .சில ஆதாரங்களின் அடிப்படையில் 45 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் விபத்து நடந்த நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.. பெரும்பாலான யாத்திரிகர்கள் தெலுங்கானா ஹைதராபாத் சேர்ந்தவர்கள். . இவ்விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவும் அவர்கள் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்தவும் இந்திய- சவுதி அரேபி அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த விபத்து குறித்து இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் டாக்டர். ஜெய்சங்கர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளார்...
Tags :



















