எம்ஜிஆருக்கு பிறகு ஒரு எழுச்சிமிக்க தலைவராக விஜய் உள்ளார் - கே ஏ செங்கோட்டையன்,

by Admin / 25-01-2026 12:24:39pm
எம்ஜிஆருக்கு பிறகு ஒரு எழுச்சிமிக்க தலைவராக விஜய் உள்ளார் - கே ஏ செங்கோட்டையன்,

தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. இன்று மொழிப்போர் தியாகிகள் தியாக நாளை ஒட்டி அவர்களின் உருவப்படங்களுக்கு த வெ க தலைவர் விஜய் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த் தேர்தல் பணி செயலாளர் ஆதவ் அர்ஜுன், கே ஏ செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மலர் தூவி மரியாதை செய்தனர். இதனை அடுத்து செயல் வீரன் கூட்டத்தை தொடங்கி வைத்த செங்கோட்டையன் காவலர்கள் கையில் கூட இனி விசில் இருக்காது என்கிற அளவில் நம்முடைய தொண்டர்கள் கையில் விசிறி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளனர். ஆனால் இங்கே அப்படி இல்லை. எம்ஜிஆருக்கு பிறகு ஒரு எழுச்சிமிக்க தலைவராக விஜய் உள்ளார். .அவர் வருங்கால முதலமைச்சர் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் .ஆயிரம் கோயை விட்டு விட்டு அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்து உள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

 

 

Tags :

Share via