மணப்பாறை அருகே சொத்து பிரச்சனை -அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி.

by Staff / 19-09-2025 09:57:13am
மணப்பாறை அருகே சொத்து பிரச்சனை -அண்ணனை  அடித்துக் கொன்ற தம்பி.

 திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள  மட்டப்பாறை பட்டியை சேர்ந்தவர் அரசன் (70) இவரது தம்பி பழனியாண்டி (65) சொத்து பிரச்சனை காரணமாக  நேற்று மாலை  அண்ணன் தம்பிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பழனியாண்டி அண்ணன் அரசனை  மரக்கட்டையால் கொடூரமாக  தாக்கியதில், படுகாயமடைந்த அரசன்  மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல், சிகிச்சைக்காக , திருச்சி அரசு மருத்துவமனை சென்றவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.இது குறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார்  சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சொத்து பிரச்சனையில் அண்ணனை கட்டையால் தாக்கி  தம்பியே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மணப்பாறை அருகே சொத்து பிரச்சனை -அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி.

Share via