கேரளாவில் கனமழை; 2 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி மற்றும் கண்ணூரில் இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை என்றால் 24 மணி நேரத்தில் 204.4 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags :



















