எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து மாத கர்ப்பம்- முதியவர்கள் 2 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் 15 வயது மகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தையின் நெருங்கிய நண்பர் ரமேஷ் என்பவர், சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார , அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி கடுமையாக இருந்திருக்கிறது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் தாயார் . அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் அனைத்து மகனார் காவல் நிலைய த்தில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு அருகே உள்ள முருகேசன் என்பவர் சிறுமியை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிறுமியின் தந்தையின் நண்பர் ரமேஷ், இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று சொல்லி அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இதில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது . இதை அடுத்து முருகேசன் மீதும் ரமேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :