by Staff /
04-07-2023
01:01:13pm
தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மின்வாரியத்தில் உள்ள 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ 380 வழங்க வேண்டும்,ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் அந்தந்த மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இறுதியாக கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை புத்தகமாக தயார் செய்து மின்வாரிய ஊழியர்கள் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அழித்தனர்
Tags :
Share via