பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கார் டிரைவர் சடலம்
காரைக்கால் சேர்ந்தவர் அபுபக்கர். இவர் டிரைவராக வேலைபார்த்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள அபுபக்கருக்கு ரத்த கொதிப்பு பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அபுபக்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று வீடு திரும்பிய மனைவி பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே ஜன்னல் வழியே பார்த்தபோது அபுபக்கர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அடுத்து நகர போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Tags :



















