ஆப்கானிஸ்தானுக்கு மேல் பறக்க விமான நிறுவனங்கள் தயக்கம்

தலிபான்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் வான்பரப்பில் பறக்க விமான நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. பாதுகாப்பு காரணங்களை கூறி இந்த வழியை தவிர்த்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு மிகக்குறைந்த விமான தூரம் ஆப்கானிஸ்தான் வழியில் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தை தவிர்த்து, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழியே பயணம் செய்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு மேல் சற்று தாழ்வாக பறந்தால் தலிபான்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தும் வாய்ப்பும் உள்ளது.
Tags :