தண்ணிரில் மூழ்கிய நெற்பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள்.

by Editor / 19-05-2025 10:07:00am
தண்ணிரில் மூழ்கிய நெற்பயிர்கள் கண்ணீரில்  விவசாயிகள்.

தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாகவே தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 500 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள காரணத்தால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : தண்ணிரில் மூழ்கிய நெற்பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள்.

Share via