3 ஏக்கர் 19 செண்ட் நிலத்தை மீட்டு ஒப்படைத்த மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், தென்கலம், கீழ் தெருவை சேர்ந்த சரவணக்குமார் என்பவருடைய தந்தைக்கு மானூர் தாலுகா, பல்லிக்கோட்டை பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கர் 19 செண்ட் நிலம் (குடும்ப சொத்து) உள்ளது. சரவணக்குமார் தந்தை இறந்துவிட்டதால் மேற்படி நிலத்தை பாக பிரிவினைக்காக வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்துள்ளனர், அப்போது மேற்படி இடம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்து. மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு சரவணகுமார் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனிடம் மனு அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ்க்கு உத்தரவிட்டதின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள்பானு மற்றும் உதவி ஆய்வாளர் தனலெட்சுமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டனர். அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் நில உரிமையாளர் சரவணக்குமாரிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
Tags :