முகக்கவசம் அணிவது இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை அமைச்சர்.
தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் முகக் கவசம் அணிவதில் சில தளர்வுகளை மட்டும் அறிவித்திருந்தோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் முக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவு ஆகியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
Tags :











messi 121tamilnews.jpg)







