நிலச்சரிவில் சிக்கிய லாரி

by Staff / 29-04-2023 01:31:26pm
நிலச்சரிவில் சிக்கிய லாரி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பனிஹால் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட இரண்டாவது நிலச்சரிவு இதுவாகும். நிலச்சரிவின் போது அந்த வழியாக சென்ற லாரி, மண் சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஞ்சாப் மாநிம் பதான்கோட்டைச் சேர்ந்த ஜஸ்வந்த் ராஜ், நரீந்தர் சிங் ஆகிய இருவர் காயமடைந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories